Monday, October 11, 2010

கூகுளில் தொலைந்தவள்

தலைப்பிரட்டைகள் தம்மை மீன்களல்ல 
என்று நம்பத்துவங்க.. 
வேண்டி இருக்கிறது ஒரு பருவத்தின் 
முந்தி விந்து விடும் ஆகாசம் 

மைக்ரேன் தலையர்களின் தியானம் 
மரப்பட்டைகளின் கீழ் வாழும் புழு நெளிவு 

பாலித்தீன் பைகளுக்குள் அடரத்துவங்கிய 
வேர்கள், கால் நுகர்ந்து பின்தொடரும் நாய்குட்டிகள் 
மீட்பனோ எண்ணழிந்த ரிமொட்டின் பொத்தானாய் 

சேவற் கொண்டைப் பூக்கள் காத்திருக்கின்றன 
அடுத்த மரணத்திற்கு காத்திருக்கும் வெட்டியானின் 
சாராய புட்டியென., 

தன்னை வதைத்துக் கொள்ளும் மனப் பிறழ்வுற்ற 
பெண்ணின் பேரோலம் உலுக்கி விழிப்பைத் திணிக்கிறது 
விரல் சுவைத்து உறங்கும் மகவில் 

சில தகனங்களுக்கு தேர் வருவதில்லை 
உன் ஆன்மா அமர நாளிலேனும் அமைதியுறட்டும்

3 comments:

Unknown said...

//மைக்ரேன் தலையர்களின் தியானம்
மரப்பட்டைகளின் கீழ் வாழும் புழு நெளிவு //

வாவ்...

Unknown said...

வசீகரமான பெண்ணென கூகுள் என்னை தனக்குள் உள்வாங்கி வெகுநாளாச்சு ...

பவள சங்கரி said...

ம்ம்ம்ம்....அப்படியா.நன்று. நன்று.

Post a Comment