Thursday, February 17, 2011

வரிக்குதிரையின் கனா

ரீங்கரிக்கும் சில்வண்டுகளின்
ஸ்தாயிதனைஅறுக்கும் கூகையின் குரல் 
அடவியின் இடுக்குகளில்
உறங்கும் சர்ப்பங்களில் நிகழ்த்தும் சலனம் ,

கைவிலக்கும் தாயின் கரத்தை இழுத்து
வைத்துக் கொள்ளும் சிறுமியின்
கனாவில் நடன வகுப்பில்
இறுக்கிக் கொள்ளும் இடையாடை ஞாபகம்.

அதிர்ந்து கொண்டிருக்கிறது செல்லிடப் பேசி,

டோராவும் புஜ்ஜியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
ஆலிஸ் -இன் அற்புத உலகில்
அடுத்த கிரகத்தில் புலம் பெயர்ந்த
தந்தையுடன் தாய்
இன்னும் இறுகும் கரத்துள்
நெளிகிறது பிஞ்சுவுடல்

6 comments:

ஓலை said...
This comment has been removed by the author.
ஹேமா said...

நேசன் சுகம்தானே !

தாய் தந்தையின் அணைப்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையின் கனவா....!

ஓலை said...

கனவுகளுக்கு கூட உவமைகள் சொல்லக் கூடிய அழகு அருமை.
சின்னக் குழந்தை இறுக்கி அணைத்து உறங்கும் அனுபவம் அலாதியானது. அனுபவித்து இருக்கேன். நெகிழ வைக்கும் கவிதை.

முதல் பின்னூட்டத்தை எப்பிடி எடுக்கிறதுன்னு தெரியலை.

ஓலை said...

Nesan,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சந்தான சங்கர் said...

அமைதியில்
உணரமுடியும் சலனம்போல்
உணரக் கிடைக்கும்
உமது வரிகளின் படிமங்கள்

அருமை நேசா..

எங்க பக்கமும்
வந்துட்டு போங்க..

பா.ராஜாராம் said...

உதைக்க போறேன் பாரு. செப்பிடு வித்தையில், "முழுக்க எங்களுக்கான கவிதைதான்" என்று நீ சொன்னதாக நினைவு.

ம்ஹூம். :-(

Post a Comment