Friday, February 25, 2011

தொப்பி தூக்கிப் பாறை



ஆகாயத்தின் மேல் படிந்திருக்கும்
இமையின் கீழ்

கடைசி சொட்டு மதுவிலிருந்து
அசுத்தமாகும் யாரோவின் உலகம்

நடன எட்டுகள் மறந்த சிறுமியின்
ஆடை அசைப்பில் நிரம்பும் பாடல் கணம்

பணயக் கைதியின் கனாவில்
வரும் மனைவியின் பிரசவம்

என்கௌண்டரில் தரையில்
சுடப்படும் புல்லட்டுகளால்
மூக்கொழுகும் பளிங்கு கோப்பைகள்


நாள் தப்பிய பெண்ணிடம்
சுக விடுதியின் பின்னறை கேள்விகளில்
எச்சில்படும் பெயர்கள்

சர்வ ஜாக்கிரதையுடன் மீண்டும்
 காலி செய்து கவிழ்க்கப் பெறுகிறது
இமை- கோப்பை  மற்றும் ..... 

4 comments:

ஓலை said...

Nice one.

பா.ராஜாராம் said...

துணுக்கு துணுக்கா கொல்லுது மக்கா.

இவ்வளவையும், 'தொப்பி தூக்கிப் பாறை'யில் பொருத்தத்தான் இன்னும் லிபிக்கவில்லை.

கொடைக்கானல்- தே.நி.வா? :-)

நேசமித்ரன் said...

சேது நன்றி


பா.ரா.,

இல்லண்ணே :)

தற்கொலைப் பாறை அப்புறம் தொ.தூ.பா கீழ தினமும் போய் செத்துப் போனவங்க நகைல்லாம் எடுத்து வருவாங்கண்ணே .அவன் கனவு :)

Gowripriya said...

பதிவிட்ட அன்றே படித்தேன்.. விளக்கியபின் தான் எனக்குப் புரிகிறது..
அருமை...

Post a Comment