Thursday, March 17, 2011

செண்பக வனம் - சில குறிப்புகள்

மிருக செட்டைகளின் கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களின் ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து

வெயில் எண்ணிப் பார்க்கும் இலைகளின் 
பாவில் எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டை பறவை

முதலுயிர் நுகர்ந்த பூமியின் பனிக்குட வாசம் பிலிற்றும் 
கடைசியுதிரம் உமிழும் மோனோபஸ் கருப்புதடுகள்
மிளிர சுனை

சமிக்ஞை மெல்லொலி இசைச் சிலந்தி உமிழும் ஒளியிழையில்
வனம் பாலிக்கும் ஏந்தியகரமாய் சிறகு விரித்து மூடும் வதிகுருகுகள்

பேறு காலப்புணர்வில் ஆண் திருடும் தனத்து மிடறாய் 
பாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு 
அவள் நாசி முடிந்து பசியவாயில் வழிந்து 

அரப்பில் சிகைகழுவிய உகிர் ,இலை மேலொளிர் பகல்
யானும் 
பெய்யும் இருதுளியிடை தூரத்தில் 
எம்பாவையரும்

12 comments:

ஓலை said...

அருமையான போட்டோ, கவிதை.
எங்கே படம் பிடிச்சீங்க?

மதுரை சரவணன் said...

கவிதை அருமை...வாழ்த்துக்கள்

ஹேமா said...

பெண்களைப் பற்றின கவிதையாயிருக்குமோ !

கமலேஷ் said...

ஒரு பட்டுப் புழு பரிணாமம்
மட்டும் கண்ணுக்கு தெரியுதுண்ணே..

//மிருக செட்டைகளின் கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களின் ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து //

முட்டை உடைத்து வெளியேறும் புழுக்களின் முதல் நிலையாய் பார்க்க தோன்றுகிறது

// வெயில் எண்ணிப் பார்க்கும் இலைகளின்
பாவில் எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டை பறவை ///

தின்ற துத்தி இலைகளுக்கு இடையில் சிலந்தி நூலையும், கழிவுகளையும் இட்டு இட்டு முன்னேறும் ஒரு பட்டுபுழு கண்முன் விரிகிறது காட்சியாய் . பாம்பின் கண்களை ஒத்த விழிகளில் ஒரு புழுவானாலும் பறவையாய்...

இதுக்கு மேல நிமிர்த்தி புடிக்கிற வரி வளைஞ்சி வளைஞ்சி விழுதே...

உகிர் என்றால் நகம்.. அரப்பு தேய்ச்சி தலை குளிச்ச நகம்....

அய்யோ ...தயவு செஞ்சி இந்த அண்ணனை பிடிச்சி ஜெயில்ல போடுங்கப்பா..

rajasundararajan said...

//மிருகச் செட்டைகளுக்குக்
கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களால் ஆன ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து

வெயிலது எண்ணிப் பார்க்கும்
இலைகளின் பாவில்
எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டைப் பறவை

முதலுயிர் நுகர்ந்த
பூமியின் பனிக்குட வாசம் பிலிற்றும்
கடைசியுதிரமும் உமிழும் மெனோபாஸ் கருப்புதடுகள் மிளிர
சுனை

சமிக்ஞை மெல்லொலி இசைச்சிலந்தி
உமிழும் ஒளியிழையில்
வனம் பாலிக்கும் ஏந்தியகரமாய்ச் சிறகு விரித்து மூடும் வதிகுருகுகள்

பேறுகாலப் புணர்வில் ஆண் திருடும்
தனத்து மிடறாய்
பாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு
அவள் நாசி முடிந்து பசிய வாயில் வழிந்து

அரப்பில் சிகைகழுவிய உகிர்-இலை
மேலொளிர் பகல் யானும்
பெய்யும் இருதுளியிடை தூரத்தில்
எம் பாவையரும்//

என்றோ அல்லது இன்னும் வாசகப்பரிவு கொண்டோ எழுதித் தந்துவிட்டால், 'பலுக்கே பங்காரமயம்' குறைந்துவிடுமா என்ன?

ஆண்டவரே, இரக்கமாயிரும்! தேவரீர், இரக்கமாயிரும்! நேசரே, இரக்கமாயிரும்!

ராகவன் said...

அன்பு நேசன்,

வாசகப்பரிவு இல்லாத கவிஞன்... சென்பகத்தோப்பில் அலையும் சிறுத்தைகள்... உங்களை திண்ணாதிருக்கட்டும். மேலே கொடுத்துள்ள புகைப்படம்...ஸ்ரீவி... சென்பகத்தோப்பு மாதிரி இருக்கு எனக்கு.

கவிதை அவஸ்தை நேசன் “பேறுகாலப் புணர்வில் ஆண் திருடும்
தனத்து மிடறாய்
பாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு
அவள் நாசி முடிந்து பசிய வாயில் வழிந்து"

நல்லாயிருக்கு... புரிந்தவரை.

அன்புடன்
ராகவன்

நேசமித்ரன் said...

சேது

நன்றி ! இது ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல இருக்கும் செண்பக ஆரண்யம் என்று அழைக்கப்பட்டு இப்போது செண்பக தோப்பாகி இருக்கும் காடு

சரவணன்

நன்றி!

ஹேமா

நன்றி! இல்லை :)

கமலேஷ்

நன்றி ! உங்கள் புரிதல் ஆசிரியனுக்கு மகிழ்வே :)

சரி கசாப்பு போட்ரலாமா ? :)

மிருகச் செட்டைகளுக்குக்
கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களால் ஆன ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து

Destruction of commercial & technical self - Out from the fossils

வெயிலது எண்ணிப் பார்க்கும்
இலைகளின் பாவில்
எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டைப் பறவை

Imitations occur along with the process of synchronization

அப்படியே நூல் பிடிச்சுப் போனா பச்சைய வாசனை- பனிக்குடம் - நீர்வற்றி கசியும் பாறைகள் - புது உத்வேகம் - ஆதிநம்பிக்கை - rejuvenatory

intuitions வழியா Smell of origin .....

தாய்பால் வழி இளமை திருடும் யயாதிகள் /மித் -தான்

கடைசியா //அரப்பில் சிகைகழுவிய உகிர்-இலை
மேலொளிர் பகல்//

உகிர் என்றால் நகம்.. அரப்பு தேய்ச்சி தலை குளிச்ச நகம்

:)

பா.ராஜாராம் said...

போஸ் நல்லாருக்கு பாஸ்!

(கைய விட்டால் மரம் விழுந்துருமோன்னு பயமா இருக்குள்ள? அப்படித்தானே இருக்கும் கவிதை கை விடும்போதெல்லாம் எங்களுக்கும்)

இப்படிக்கு
-மற்றொரு சிலுவை
ரா.சு.அண்ணன் பேரவை
சவுதி கிளை.

RAJA RAJA RAJAN said...

அருமை... காட்சியும் கவியும் அருமை.

நேசமித்ரன் said...

ராசு அண்ணன்

அற்புதத்தை அடையும் தருணம் உங்கள் பின்னூட்டங்களில் என் கவிதையை நான் வாசிக்கும் கணமே!

மிக அழகாக அணுகித் துய்க்கத் தருகிறீர்கள் அண்ணா.

தெண்டனிட்ட நன்றிகள்.

ப்ரிய ராகவன்

நன்றி ! இது ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல இருக்கும் செண்பக தோப்புதான் :)

தின்னத் தர விரும்பினாலும் தீராத ஊழ் விடுமோ என்னை :))

மிக நல்ல வீணைதடவிக் கொண்டிருக்கிறீர்கள் கதாவிலாசங்களால்.. தொடர்க! வாழ்த்துகள்

பா.ரா

பைத்தக்காரனாக்குற நிமிஷத்த மனுஷப் பயலா சொல்லிற பக்குவம் வாய்க்கணும்ணே ராசு அண்ணனன் மாதிரி ,உங்கள மாதிரி,சரவணக்குமார் கணக்கா ,காமு போல, ராகவனாட்டம்

வாய்க்கணும் !

ஓலை said...

"(கைய விட்டால் மரம் விழுந்துருமோன்னு பயமா இருக்குள்ள? அப்படித்தானே இருக்கும் கவிதை கை விடும்போதெல்லாம் எங்களுக்கும்)"

அருமை பா.ரா. அதே.


"பைத்தக்காரனாக்குற நிமிஷத்த மனுஷப் பயலா சொல்லிற பக்குவம் வாய்க்கணும்ணே ராசு அண்ணனன் மாதிரி ,உங்கள மாதிரி,சரவணக்குமார் கணக்கா ,காமு போல, ராகவனாட்டம்
வாய்க்கணும் ! "
--நானும் வழிமொழிகிறேன் நேசன். வெள்ளந்தி மனசுக்காரர்கள்.

இரசிகை said...

//

ஆண்டவரே, இரக்கமாயிரும்! தேவரீர், இரக்கமாயிரும்! நேசரே, இரக்கமாயிரும்!

//

M...

Post a Comment