Friday, September 9, 2011

சல்லடைநிழல்

எவள் விட்டுச் சென்ற கொலுசின்
ஞாபகத்தில் நுரை கோர்த்திருக்கிறது
நாணல் நதிக்கரை

முகம் பொத்திய எந்த முந்தானையின்
வாசத்திற்கு தரை தடவிக் கொண்டிருக்கிறது
இக்கிளையின் சல்லடைநிழல்

எந்த உதட்டுக்கான முத்தத்தை
நீர்தளம் தொட்டு காற்றில் பறக்க
விடுகிறது இம்மீன்

யார் சாம்பலை கரைத்து விட்டு
எலும்பை நழுவ விட்ட இப்பாண்டத்தின் சில்லில்
வந்தமர்கிறது இந்த தட்டான்

2 comments:

Gowripriya said...

"நீர்தளம் தொட்டு காற்றில் பறக்க
விடுகிறது இம்மீன்'- அருமை :)

Anonymous said...

சல்லடைநிழல் கவிதை அருமை...நேசமித்ரன்...


ரெவெரி

Post a Comment