Saturday, September 17, 2011

நான் பிணவறைக் காப்பாளன்



நானொரு பிணவறைக் காவலன்
தனித்திருக்கும் நேரமெல்லாம் காமுற்று இருப்பேன்
தற்கொலை பெண்கள்,நடிகைகள் பிரேதம்
சாலையோரப் பிணங்கள், காவல் அறை மரணங்கள்
தீக்குளித்த உடல்கள்
உயிர் பிரிந்திருக்கும் வழிகள் ,வலிகள் ,உறைந்த புன்னகைகள்
தூக்கிலிட்ட உடல்களில் இருந்து வழிந்திருக்கும் விந்து
பெண்களுக்குள் உறைந்த விந்து
சீழ் நுதல் நாற்றம் நரை
திறந்த விழிகள் மடங்காத விரல்கள்
வளரும் நகம் வளரும் மயிர்
புணர்ச்சி கீறல் காயம் மாயம்
காசு மாசு லஞ்சம்
ரச்புடின் பிரகாஷ்
கர்ப்பவதி கைம்பெண்
நீரால் காரால்
ஊழி மூளி
நான் பிணவறைக் காவலன்

பிணங்களே இல்லாத நாளில்
நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்
முன்குறிப்புகளோடு

3 comments:

இரசிகை said...

nallaayirukku...

Anonymous said...

பிணங்களே இல்லாத நாளில்
நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்
முன்குறிப்புகளோடு
....
உரத்த சிந்தனை...அசத்தல் வரிகள்...நல்லதொரு கவிதை...

chandrapal said...

கலைத்து போட்டது கலையென்பேன் நான்...
ஆனால், இந்தக் கவிதையில் உண்மை கொஞ்சம் கூட களையாமலிருக்கிறது...
கடைசி வரியில் உலகம் அடங்கும் என்பதும் உண்மை.

Post a Comment