Saturday, October 9, 2010

மழை

காளான் குடைக்குள் ஒடுங்கிக் கொள்ள முடிகிறது 
இரவு நேர வெளிச்ச ஜன்னல்களுடன் மரவட்டை ரயில் 

முன்னறிவிக்க ஆகாசம் பார்த்துக் குலைத்த நாய் 
மயில் .. கடைசியாய் தென்காசிப் பக்கம் பார்த்தது 

கடலை சல்லித்துக் கொண்டிருக்கிறாள் 
ஆயிரம் கண்ணுடைய தேவதை 

தகப்பனுடன் நனைந்து கொண்டிருக்கிறாள் 
அருவியின் கூச்சலுடன் மொட்டை மாடியில் அதே சாதி 
தேவதா 

மடி மட்டும் நனையாமல் இருக்கிறது சுவரொடுங்கி 
சுருங்கிய இமையசைக்கும் நகரத்து பசுக்கள் 

கழுவ கழுவ திரவப்பொட்டுகள் கார் கண்ணாடியிலும் 
இன்னுமொரு தலையணை காலியாகவே மாதம் பல கிடக்கும் 
படுக்கையிலும்

4 comments:

vasu balaji said...

/கடலை சல்லித்துக் கொண்டிருக்கிறாள்
ஆயிரம் கண்ணுடைய தேவதை /

அழகோ அழகு

rajasundararajan said...

//காளான் குடை, மரவட்டை, மயில், கடலைச் சல்லித்தல், அருவி, மடிமட்டும் நனையாமல் சுவரொடுங்கிய நகரத்துப் பசுக்கள்// இவை எல்லாமே மழைக்காலத்தினவை.

//இன்னும் ஒரு தலையணை காலியாகவே மாதம் பல கிடக்கும் படுக்கையிலும்// 'நெடுநல்வாடை' நினைவுக்கு வருகிறது. (தலைவன் கடமையின் பொருட்டுப் புலம்பெயர, ஆற்றியிருக்கும் தலைவி). திட்டமிட்டீர்களா தெரியாது, கார்காலத்தையும் ஆற்றி இருத்தலையும் இணைத்த பழந்தமிழ் மரபு வாசிக்கக் கிட்டியதில் ஈரமானேன்.

[வானம்பாடிகள் தன் பின்னூட்டத்தில், 'தேவதை' என்று சரியாகவே திருத்தியிருக்கிறார். இன்று, விதூஷ் அவர்கள் ஆசைப்பட்டாற் கூட ஸம்ஸ்க்ருதத்தில் எழுத முடியாது. கேட்கச் செவி வேண்டுமே? 'தேவு' எனும் வேர் தமிழுக்கும் பொது அல்லவா?]

நேசமித்ரன் said...

வானம்பாடிகள் சார் மிக்க நன்றி

ராசு அண்ணன்

மென்னியை பிடித்துத் தூக்கும் தாய்ப் பிராணியின் பற்கள் உங்கள் வாசிப்பு . திட்டமிட்டதே இதுவும்
ரொம்ப சந்தோஷம்ணே .தேவதா ஆசைப்பட்டு சேர்த்த பதம் :)

இரசிகை said...

HEY...
YENAKKU PURINJUDUCHU...


SUPERB...:)

Post a Comment