Monday, March 21, 2011

மற்றும்... ஃ

 சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...


பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள் 
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்

சொற்ப தானியங்களுடன் இறுதி நாள்
நுரைப்பஞ்சாய் சாயமுறுகிறது
வரிக்குதிரையின் கருவில் தோல்

பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும்
நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும்
அல்லது ஆல்பா,பீட்டா ....


தூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற
உடல்நலத்துடன்..,
காலியாகும் இங்குபேட்டர்களில் இருந்து
ஒரு எளிய பகல்

9 comments:

பா.ராஜாராம் said...

//மற்றும்// -

பலர்! (சரியா?)

//சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...//

டைரக்சன் / மகேந்திரன்! (ஓகேயா?)

//பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள்
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்//

(சிலேட்டில் தாயக் கட்டம் வரஞ்சு, வெளாண்டதுக்கு அப்புறமாதான் மீன் குழம்பு சாப்பாடு' ன்னு சொல்ல வர்றியாக்கும்?)

//பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும்
நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும் ஃ
அல்லது ஆல்பா,பீட்டா ....//

அதுவும் இல்லாவிடில், சல்பேட்டா! (ரைட்டா?)

//தூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற
உடல்நலத்துடன்..,
காலியாகும் இங்குபேட்டர்களில் இருந்து
ஒரு எளிய பகல்//

கட்டபொம்மனை, கோழிக் குஞ்சைப்போல தூக்கு மேடைக்கு இழுத்து செல்கிறான் பகலைப் போன்ற வெளிச்சமுடைய பறங்கித் தலைத் தடியன்! (எக்ஸ்சாக்ட்லி?)

***

(ரா.சு. அண்ணனின் பின்னூட்டத்திற்கு பிறகு வந்து சீரியஸா படம் பார்த்துக்கிறேன்.) :-)

கனிமொழி said...

ஹப்பாடி!! நானே புரிஞ்சிகிட்டேன்..
என்ன புரிஞ்சுதுன்னு கேட்காதீக.. :)

You are extraordinary...!!
Go on!!

rajasundararajan said...

தம்பி பா.ரா.,

நேசமித்ரனின் கவிதைகளை வாசிப்பதற்கு நிறைய உழைக்கவேண்டும்.

இந்தக் கவிதையில், முதல் அடியில் ‘ஸீ-ஸா’ என்று இருக்க வேண்டியது சீசா என்று எழுதப்பட்டதால், கண்ணாடிப் போத்தலோ என்று நான் சற்றுக் குழம்பினேன்.

இரண்டாவது பத்திப் ‘பகடை’யும் முதலில் அப்படித்தான் குழப்பியது. எங்கள் ஊரில் அது ஒரு சாதிப் பெயர். ‘பகடைக்காய்’ என்று எழுதினால் மிகைபடக் கூறல் என்று கவிஞர் அஞ்சினார் போலும்.

//மகவுண்ட மீன்//. சின்ன மீனைப் பெரிய மீன் தின்னும் என்பது சின்ன வயதில் இருந்தே கேள்விப்பட்டது. பெற்ற மகவைத் தின்னுமா என்று ஐயம் வர, கூகிள் வழித் தேடி, ‘ஆம்’ என்று அறிந்தேன். இப்படியே, //வரிக்குதிரையின் கருவில் தோல்// 'ஏமாற்று வரிகள்' //ஆல்ஃபா பீட்டா// 'பிறவித் தொடர்பு' etc.

பாருங்கள் எவ்வளவு உழைக்கவேண்டி இருக்கிறது! இவ்வளவு தகவல் திரட்டிய பிறகும் உள்ளுறை இன்னதென்று உருவ வேண்டும் அல்லது கற்பித்துக்கொள்ள வேண்டும்.

//மற்றும் ஃ//. ஆய்தம், உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கும் இடைப் பட்டது. ஆக, இது ‘இடைப்பட்ட விசயங்களை’ப் பேசுகிற கவிதை ஆகலாம். ||சார்ந்துவரல் மரபின் (எழுத்து. 1)||, ||நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். (செய். 215)|| என்று தொல்காப்பியம் சொல்வதால், இக் கவிதை ‘சார்நிலை’ பற்றியோ ‘நலிவு’ பற்றியோ கூட இருக்கலாம். நமக்குத் தெரிந்த கூட்டான்களைப் போட்டு ஒரு கறி சமைக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்ய?

பகடைக் காய்களின் வெறுமைக்குக் கீழ் உடல் சொடுக்குகிறது; வீட்டுப் பாடங்கள் ஏதுமற்ற சிலேட்டுள் உடல் சொடுக்குகிறது என்று தனித்தனியாகச் சொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

காலையில் ஐந்து மணிக்கு விழிக்க வேண்டும். இருந்தும் ஒன்றரை மணிக்கு இப்படி உழைக்க, என்னைப்போல் வேலைவெட்டி இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

ஹேமா said...

நேசன்...பாரா அண்ணா அழகா விளக்கம் சொல்லிட்டார்.உண்மையாவே புரிஞ்சுகிட்டேன் !

நேசமித்ரன் said...

@பா.ரா,ஹேமா


ரா.சு .அண்ணன் சொன்னதே .எவ்வளவு அழகா சொல்லிட்டார்

1.

கான்செப்ட் சொன்னா அடிக்க வந்திருவாங்க மக்கள் :))

ஆல்பா ,பீட்டா,காமா - ப்ரோட்டான்,எலக்ட்ரான்,நியூட்ரான் - xx,xy,xxy (47 xxy) - மூன்று காலங்கள்

இந்த ஃ -ன்னா கான்செப்ட் ஒரு ஆர்பிட்ல (பெருநெல்லிக்காய் போலவும் வாசிக்கலாம் )எழுதிப் பார்க்கலாம்னு தோணிச்சு.

இந்த ஒத்திசைவை கலைச்சு அல்லது பயன்படுத்தி நாம உருவாக்குறது என்ன? தசை மீதான அவாவை தீர்த்தல் - பிராய்லர் :)

2.

இந்த ஸ்கெலிட்டன் மேல கனவு - இருத்தலியம் .
மகவுண்ட மீன் - தன் கனவை தானே தின்னுதல் - இறுதிநாள் உதிரப் பஞ்சு - கனா திரிதல் /சொற்பமாகும் நம்பிக்கைகள் (தானியங்கள்).

3.

கவிதையின் துவக்கத்திலிருந்து இறுதி வரை ’இயக்கம்’ அப்படிங்குறது இருக்குற மாதிரிதான் அமைஞ்சிருக்கும்.அதாவது ’வெளியேற்றம்’

சீசாப் பலகையில் பூ அதன் இயக்கத்தின் வழி உணரும் கிளைஅதிர்வு,
கார்கால நட்சத்திரமற்ற ஆகாயத்தின் கீழ் இருக்கும் வெளிச்சப் புள்ளிகளற்ற குளத்தில் ஒளிக் கரணமடிக்கும் மீன்,உதிரப் போக்கு- கருவில் நிறம் விழுதல் - பார் கோட் போல வரிக்குதிரை தோல் , கிளைக்கும் கதிரியக்கம் ,காலியாகும் இங்குபேட்டர்கள்

4 .

பிரபஞ்சத்தின் சமநிலைக் குலைவு அப்படீங்குற சாதாரணப் பார்வையிலும் பார்க்கலாம் .மேலிருந்து கீழான வாசிப்பில்.

நேசமித்ரன் said...

கனிமொழி

மிக்க நன்றி


ரா.சு அண்ணன்

மிக்க நன்றி அண்ணே!

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க. :)

ஓலை said...

பா.ரா. சூப்பர். புகுந்து விளையாடறீங்க.
நேசன்! விளக்கத்திற்கு நன்றி.

ஓலை said...

Yennamo theriayala. Innikku nesantternthu yenna vanthirukkunnu vanthu paarththu, melulla kavithaikkaana unga vilakkangalaip paarkkum pothu viyappaa irukku.

இரசிகை said...

M...!!

Post a Comment