Thursday, April 28, 2011

ஊமை வெயில்


குற்றேவல் சேடியாய்
வந்து போனது மழை
மரத்தின் நிழல்வெளி செருப்பும்
நனையாமல்

ஊடல் மனைவியின்
கோணல்ப் பிறை முதுகை தீண்ட நீட்டி
திரும்பிய  விரல்களின்
தயக்கத்துடன்

மின் விசிறி நாவு மேவிய தூசாய்
விரிசிறகு மட்டும் நிறம் அடர்ந்த பறவைகள்

எடுத்து விட்ட விரலை  மீண்டும் வைத்துக்
கொள்ளும் தூக்கக் குழந்தையாய்
இரண்டு நாள் மட்டும் தள்ளிப் போன
சந்தோஷம்

படம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்து கூரை ஓவியம்   

5 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
மடவார் வளாகம் சென்று பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

ராகவன் said...

அற்புதமான கவிதை இது... நேசன்... அழகுணர்ச்சியும்...கற்பனையும்... செம்புல பெயல் நீர்...

நேசமித்ரன் said...

இரத்னவேல் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராகவன் மிக்க நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

rajasundararajan said...

'ஊமை வெயில்' உரைக்கும் இல்லையா?

உரைக்கிறது.

உங்களுக்கும் உரைத்துத்தானோ என்னவோ எங்களுக்கும் புரிகிறாற்போல இறக்கி இருக்கிறீர்கள்!

இரசிகை said...

PIDICHURUKKU..........

Post a Comment