Wednesday, November 30, 2011

நப்பின்னைக்கு ...




ஈன்ற பொழுதின் உதிரங்கழுவாத அந்தி
முதல் சொட்டுக்கு 
கண் திறவா குன்றிலிருந்து 
இறங்குகிறது மேய்ச்சல் முடிந்த 
பிட்டி பச்சையத்துடன் 
வெள்ளாட்டுக் கிடை 
சுவாசிக்கிறாள் 
தாவணி நிலவுலாவு 
நீர்மலி மேனியாய் அசைய 

அடைகாக்கும் சர்ப்பம்
அரவம் கேட்டு விரித்த படம் 
குவிகிறது ஐயம் தீர்ந்து 
தளும்பி தளும்பி ஏறி விடுகிறது 
படிக்கட்டில் மாரிக்கால குளம் 

ஆரஞ்சு நிற சிலேட்டின் கடிப்பட்ட 
பற்தடம்
புரள்கையில் விலகுகிறது 
கொலுசு 

வாழைப்பூவுக்குள் 
ஒளித்திருக்கும் விரல்களை 
திறக்கத் முடிகிற அணிலை 
காணக் கூடுவதில்லை இப்போதெல்லாம்
காதுக் கம்மலுக்கு 
தெரிந்திருக்கிறது குளியல் சோப்பை 
நகக்கண்ணில் வைத்துக் கொள்ள 
எவ்வளவு முயன்றாலும் 
முடிவதில்லை உதடுகளுக்கு



8 comments:

இரசிகை said...

//
தளும்பி தளும்பி ஏறி விடுகிறது
படிக்கட்டில் மாரிக்கால குளம்
//

nalayirukku...

வடகரை வேலன் said...

//தளும்பி தளும்பி ஏறி விடுகிறது
படிக்கட்டில் மாரிக்கால குளம் //

பதின்ம வயதுகளில் இதை ஒரு வேலையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

”தண்ணி ஊறுச்சு கிணறு நிறையுது இதுல ரசிக்க என்னடா இருக்கு?”ன்னு கேட்ட நண்பர்களிடம் சொல்ல எதுவும் இல்லை இப்போதும் என்னிடம்.

நேசமித்ரன் said...

ரசிகை நன்றிகள்

வேலன் அண்ணாச்சி ,

ரசனைகள்தானே வாழ்வின் உயவும் (உயர்வு இல்லை) நீட்சியும் :)

ஹேமா said...

சுகமா இருக்கீங்களா நேசன்.இதற்கு முந்தைய இரண்டு கவிதைகளையும் பார்த்து ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டேன்.இது ஒரு கன்னிப்பெண் அழகுபற்றிய வர்ணனையா.ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன் !

இரசிகை said...

intha padaththai thirumba paakkalaanu vanthen...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று 20.06.2012 வலைச்சரத்தில் தங்களின் ஓர் படைப்பைப்பற்றி,
செல்வி நுண்மதி அவர்களால்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_20.html

நேசமித்ரன் said...

நன்றிகள் கோபாலகிருஷ்ணன் சார் :)

Post a Comment