புத்தனைக் கொன்ற குருதியில்
பூப்பெய்திய காதலை
ஒரு தகன நெருப்பில்
தழைக்கத் துவங்கும் ஞானத்தை
மகரந்தம் ஒட்டிய வண்ணத்துப் பூச்சியின்
உணரிகளின் அசைவை
எழுதிப் பார்த்த கவிதைகளை
தனிமையின் இன்மையை
பேசித் தீர்க்கும்
பின்னிரவுக் குயிலின் பாடலை
எலும்புகளில் தீ சுரக்க வைக்கும்
தருணத்தை பரிசளிக்கும் தப்பிதங்களை
நட்பின் துரோகத்தை
பிரியங்களின் வன்முறையினை
உலர்ந்த நதியின் படுகைகளில் ஆழ்
துளையிட்டு நீருறிஞ்சும் பாவனையில்
பொருள் வயிற் பட்ட வாழ்வின் கோரங்களை
ரேகைகளை எழுதும் கருவறை மோனத்தில்
கல்லெறிந்த புத்தகங்களை
வாதையை வலிந்து துய்க்கும் மின்மயான மனசை
மிருக வாசனை மாறாத புணர்வின் கீறல்களை
கொப்பளிக்கும் உலோகக்குழம்பாய்
கண்மாறும் வதை தெறிக்கும் நிமிடங்களை
வசீகர பொய்களை
மரிக்கும் ஆணின் உடல் கசிய விடும்
கடைசித்துளி விந்தை
வாடகைக் கருவறைகளை
திரிந்த காமத்தை
தீராத அன்பை
செப்பிடு வித்தை
13 comments:
செப்புடு வித்தையில்
செப்பு மொழி எழுதிய
வித்தகருக்கு
வணக்கம்... வணக்கம்.
நேசனின் இந்த கவிதை கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. முதல் கவிதை என்பதால்... நோ கும்மி
நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டு நகர முடியாம மனச போட்டு அழுத்துது கவிதை... இன்னும் நெடுந்தூரம் பயணப்பட வேண்டும் நான் உங்கள் மொழியின் சூட்சமங்களை உணர..
இது சௌலப்யம். நன்றி நேசமித்திரன்.
மொழிகளின் செப்பிடுவித்தை அழகு !!!
- மடங்கி கிடக்கும்
செப்பிடு வித்தையை
சட்டென்று
ஒரு குடையென விரிக்கும்
செப்பு மொழி -
நேரடியாய் பேசும் கவிதைகளுக்காக இத்தளமா அண்ணா அல்லது
புனிதக் காளானின் கள்ள விதைகள் வளர்ந்து அதன் கிளைகளின் நிழல்கள் இங்கும் விரியுமா...
வணக்கம் நேசன்.ம்ம்ம்..இது நல்ல விஷயம்.கவிதை விளங்காத மண்டுகளுக்கு இங்க !இப்பிடி விளங்கிறாப்போல அழகா எழுதணும்...!
செப்பிடு வித்தைதானே நீங்க எழுதுற கவிதை எல்லாமே !
ம், நண்பா.....!!!
கமலேஷ்,நண்பா, ம்ம்....
அருமையாய் இருக்குடா பயலே!
வாழ்த்துகள்! ;-)
பா.ராஜாராம் said...
அருமையாய் இருக்குடா பயலே!
வாழ்த்துகள்! ;-)
ராஜா அண்ணா இப்படி நீங்க போடற கமெண்ட் என்னவோ நீங்க பக்கத்துலே நின்னு பாராட்டற மாதிரி
இருக்கு தொடரட்டும்
ராகவன் அண்ணே
முதல் பின்னூட்டம் உங்களுது. ம்ம் ரொம்ப சந்தோஷம் . இந்தத் தளம் புரிதலை நோக்கியே நகரணும்னு நினைக்குறேன் கிறுக்குத்தனம் பண்ணாம இருடான்னு சொல்லித்தான் கூப்டு வந்துருக்கேன் குரங்கு அடங்கனும் :)
ராமசாமிக் கண்ணன்
வாங்க பாஸ்
மிக்க நன்றி வாதையை பேசுவதுதானே கவிதைகள்
மகிழ்ச்சி இங்கும் வாசிக்க நேரம் ஒதுக்குவது
வானம்பாடிகள் சார்
வாங்க மிக்க நன்றி சார்
தொடரும் சார்
சக்தி
மிக்க நன்றி தங்காய்
கமலேஷ்
அப்படித்தான் நினைச்சிருக்கேன் நண்பா . பார்ப்போம்
மிக்க நன்றி நண்ப வருகைக்கும் வாசிப்புக்கும்
மதுமிதா
தோன்றுவதைக் கூறலாமே சகோ :)
மிக்க நன்றி வருகைக்கும் வாசிப்பிற்கும்
ஹேமா
வாங்க ! அன்பும் தோழமையும் மிளிரும் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி . நிச்சயம் தொடரும்
ஆனா ரூனா
வாங்க :)
ம்ம் ! அப்படித்தான்
மிக்க நன்றி நண்பா
பா.ரா
மிக்க நன்றிண்ணே !
சக்தி மிக்க நன்றிம்மா தங்கச்சி
அண்ணன் அப்படித்தான் வார்த்தைகளால் உண்டாக்கும் நெருக்கம் அலாதியானது
Post a Comment