ஒரு பெருந்துயரை
பிளிறும் குரலில் மரண வீடு
தோறும் அழும் ஒப்பாரிப் பெண்
விசும்ப மட்டுமே முடிகிற வீடாய்
இருக்கிறது நீயற்ற உன் அண்மை
உனதின்மைகளில் உறங்கிப்
பழகிய பூனை உன் மீள்வருகை கலவிகளில்
கதவு பிறாண்டியபடி இருக்கிறது
எவ்வளவு துரத்தினாலும் நாவறண்ட
குழந்தையின் அழுகைக்குரலுடன்
உள்ளழைத்துக் கொண்ட பவள மல்லி மரத்தில்
இரவுகளில் பூவுதிர்த்தபடி கிடந்த கற்பும்
வெப்புத் தாளாமல் குழி பறித்துறங்கும் நாய்க்கு
கொடுத்திருக்கும் குளிரும்
கம்பளிப் பூச்சிகள் அப்பிய முருங்கையாய்
தின்னக் கொடுத்தபடி
கர்த்தனே உயிர்தெழுப்புதலற்ற
சிலுவையில் அறைந்து போ
15 comments:
நாயும் ,பூனையும் இறப்பு வீடும் பரம பிதாவும் அண்மையை தூண்டியபடி...
தவிக்க வைக்கும் மனது கவிதையாய்...
ரொம்ப நல்லா இருக்கு நேசன்
//நீயற்ற உன் அண்மை// ஆகா!
//கம்பளிப் பூச்சிகள் அப்பிய முருங்கையாய்// ஊறல் அரிக்கிறது.
இது, இதுதான் எளியவர்களாகிய எங்கள்மேல் இரக்கப்பட்டு இறங்கியதொரு வெளிப்பாடு. நல்லி எலும்புகளுக்கு அல்ல பஞ்சு மிட்டாய்க்கு உள்ள பல்லவர்களாகவே இன்றளவும் இருக்கிறோம், மன்னியும்!
//சிலுவையில் அறைந்து போ//-ஆ? அல்லது 'அறைபட்டு/ அறையப்பட்டுப் போ'-ஆ?
கவிதை நன்றாக இருக்கிறது நேசமித்ரன்.
நல்லி எலும்புகளுக்கு அல்ல பஞ்சு மிட்டாய்க்கு உள்ள பல்லவர்களாகவே இன்றளவும் இருக்கிறோம், மன்னியும்!
உண்மை நேசன் அண்ணா
எளிமையான கவிதைகளுக்கு நன்றி
கர்த்தனே உயிர்தெழுப்புதலற்ற
சிலுவையில் அறைந்து போ
கிளாஸ்
எத்தனை தடவை வாசித்தாலும்,எப்படி வாசித்தாலும் சுகமாய் இருக்கிறது.
நல்லா இருக்குன்னா
செந்தில் சார்
வாங்க மிக்க நன்றி சார் !வருகையும் வாசிப்பும் மகிழ்வளிக்கிறது
யாத்ரா
வாங்க நண்பா. நிரம்ப நாள் ஆனது போல் இருக்கிறது பேசி..
மிக்க நன்றி
ராஜ சுந்தர்ராஜன் அண்ணே
வாங்க ! ரொம்ப சந்தோஷம் அண்ணே உங்கள் வருகை . உங்கள் வார்த்தைகளில் இருக்கும் வாத்சல்யம் மிகுந்த ஊக்கம் தருகிறது இந்தத் தளம்
தொடர்ந்து நிரம்பும் அண்ணே .அறையப்பட்டுப் போ தான் அண்ணே . அப்படியாகத்தானே முடியக் கூடும்
ஆதவா
வாங்க ! மிக்க நன்றி வருகைக்கும் வாசிப்பிற்கும்
:)
சக்தி
வாங்க தங்கச்சிமா! மிக்க நன்றி . அப்படியே ஆகட்டும் !மீண்டும் நன்றிகள்
ஜெர்ரி
வாங்க தலைவரே ! ரொம்ப சந்தோஷம்
மிக்க நன்றியும் அன்பும்
ராமசாமி கண்ணன்
வாங்க நண்பரே
மிக்க நன்றியும் அன்பும்
அருணா மேடம்
வாங்க என்ன ஆச்சு ? ஏன் சோக ஸ்மைலி
மிக்க நன்றி வருகைக்கும் வாசிப்புக்கும்
என்ன சொல்ல ...
சிலுவையில் மரிப்பதற்கு முன் அவர் கூறிய இறுதி வரிகள் தாம் நினைவிற்கு வருகின்றன ...
நா வறண்டதொரு நதி
ஆவணி அவிட்டத்தில் சுளிக்கும் நீரின்
மீள் வருகைக்காக
ஈரம் ஏங்கி கிடப்பது போலவும்
உச்சியில் நின்று வருத்தும்
ஒற்றை சூரியன் விரகமாகவும்
கொடுந்தனிமை வாழ்வின் வலி தாங்காமல்
உடையாத சவப்பெட்டியை வரமாய் கேட்டு
தன் பிரேதத்தை தானே சுமந்து திரியும்
ஓர் தன்யனாகவும்
----------
உங்களின் பல கவிதைகள் எப்போதுமே எனக்கு
ஒரு நாய் குட்டியின் கையில் கிடைத்த முழு தேங்காய்தான்.
உடைக்க தெரியாமலே உருட்டி உருட்டி மருகி கொண்டிருப்பேன்.
ஆனால் இந்த தளத்தின் கவிதைகளை எனக்கு தேவையான வடிவில்
திறந்து கொள்ள முடிகிறது அண்ணா.
சுவை தாளாமல் ஒரு வாசகனாய் கை நீட்டுகிறேன்
இன்னும் கொஞ்சம்...
இன்னும் கொஞ்சம்...
கொடுங்களேன்...
ரொம்ப பிடிச்சிருக்கு நேசா!
// இது, இதுதான் எளியவர்களாகிய எங்கள்மேல் இரக்கப்பட்டு இறங்கியதொரு வெளிப்பாடு. நல்லி எலும்புகளுக்கு அல்ல பஞ்சு மிட்டாய்க்கு உள்ள பல்லவர்களாகவே இன்றளவும் இருக்கிறோம், மன்னியும்//
ஆஹா! ஒண்டிக் கொள்கிறேன் அண்ணே நானும். :-)
SUPERB............
Post a Comment