நீரில் வலை விழுவதைப் போல
புல்வெளியில் அமர்கின்றன குருவிகள்
சலனங்கள் சப்தங்களால் அறியப்பெறும்
புல்லின் அடியீரத்தில் கிட்டுகின்றன
இரைப் பூச்சிகள்
நகர்ந்தபடி இருக்கிறது வெயிலும்
நீரில் வலையும்
திரும்பும் நேரம் வந்துவிட்டது
வலைகள் படகிற்கும்
குருவிகள் யாருமற்ற வீட்டின் கூட்டுக்கும்
3 comments:
ரசித்தேன் நேசா,[ஊருக்கு எப்போ வர்றீங்க.]
வரிகள் நன்று !!
யாருமற்ற வீட்டின் கூடு ...குருவியின் வீடு ...
Post a Comment