விளையாடத் கேட்கும் மடிகள்
உப்புமூட்டை தொங்கத் தோன்றும் தோள்கள் ....
ஸ்பரிசமற்று முதிர்வதை தீர்க்க வருகிறார்கள்
தங்கைக் குழந்தைகளோ, பேருந்தில்
உறங்கி சாயும் பெயர் அறியாப் பெண்ணோ....
தாமதமான ஈர நாட்களில்
நுரைப்பஞ்சு பெற்றுத் திரும்புகையில்
மருந்தகத்து பெண் சிரித்து வைக்காதிருக்க
பிரார்த்தித்து தொலைக்கிறது மனசு
அம்மா மாத்திரைகளை தவிர்க்காதே
பிதாவே பின்னிரவில் விசும்பாதிரும்
யார் இடம் மாற்றி வைப்பது
எறும்பேறாத உப்பு ஜாடிகளை
6 comments:
//உப்புமூட்டை தொங்கத் தோன்றும் தோள்கள் ....
ஸ்பரிசமற்று முதிர்வதை தீர்க்க வருகிறார்கள்
தங்கைக் குழந்தைகளோ, பேருந்தில்
உறங்கி சாயும் பெயர் அறியாப் பெண்ணோ.... //
நல்லாருக்குய்யா...
நெசமாவே இது எனக்குப் புரிஞ்சிட்டு!
அண்ணே எளிமையான எழுத்துக்கு நன்றிகள் பல..
:)
சற்று நின்று செல்ல வைக்கிறது...
மண்டையை பிய்த்து கொள்பவர்களுக்காக இந்த வலையா ?
நிரம்ப மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
விஜய்
மண்டையை பிய்த்து கொள்பவர்களுக்காக புதிய வலையா ?
நிரம்ப நன்றி
வாழ்த்துக்கள்
விஜய்
Post a Comment