சுவாசங்களால் உஷ்ணப்படாத அறைகள் தம் வடிவை இழக்கத்துவங்குகின்றன சிலந்திகளால்
இருப்பின் அதியுன்னதத்தை விட
கனவின் மீதான் குறி சொல்லுதல் உறையுடன் துய்த்தல்
பட்டுச்சீலை பிசிறுகளில்
நினைவுக்கு வந்து தொலைக்கிறது
சதா பட்டுக் கொண்டே இருந்த உடல் மற்றும் உடல்
நிராகரிக்கபட்ட சொற்கள் அடைமுடிந்த ஓடுகளாய்
கொத்தித் திறக்கப் பெறுகின்றன பிறிதொரு பறவைக்கு இரையாக
ஒற்றை மார்புடன் சீலை கட்டப் பழகுவதாய்
சிரிப்பால் நிரப்பிக் கொண்டிருக்கிறது நிறையாத பிறை
2 comments:
பட்டுக்கொண்டே இருக்கும் உடல் மற்றும் உடல்..புரிகிறது நேசன்.படும் உடலும் மனமும் பாடுதான் !
நன்றி ஹேமா :)
Post a Comment