Tuesday, October 5, 2010

குழியேகும் எறும்புகள்

தகனச் சாமத்தில் அழுகை தீர்ந்து


உறங்கும் மகளை எழுப்புகிற நாயின் ஊளை

படர்த்தும் நடுக்கத்திற்கு

எரியும் ஒற்றை விளக்கு அணையாமல்

திரவமூற்றும் கரம்

வேண்டியிருக்கிறது ஒரு மெல்லிய

அணைப்பிற்காக



தீராச் சமர்களின் விரை தீர்ந்த ஆயுதங்கள்

தலைதிருப்பப்படும் மௌனம்

மகுடிகளைப் போல் இயக்குகிறது

பிடாரனனின் காலடி அதிர்வுடன்



கசாப்பின் மரமேடை கழுவப் பெறுகிறது

துணுக்குகள் மீதமிருக்கின்றன குழிகளில்

முள்மரங்களில் ஏறும் சாரை வளைவுகளுடன் இல்லை

குழியேகும் எறும்புகள்



பிண்டத்துண்டங்களுடன் வெளியேறும்

உதிரத்தின் கவிச்சை தாள

இயலாததாய் இருக்கிறது

சுகித்த பாகங்களை அறுத்தெறியும்

கசப்புடன்

4 comments:

ஹேமா said...

நேசன்...கவிதை விளங்குது விளங்கல.

செப்பிடு வித்தைல விளங்குறமாதிரி
எழுதுவேன்னு சத்தியம் பண்ணிட்டு இங்கயும்
இப்பிடிக் குழப்பினா எப்பிடி !

பவள சங்கரி said...

அப்பப்பா......சவால்தாங்க........குழியேகும் எறும்பின் நிலை? கவிஞரே........என்ன சொல்ல தங்கள் புலமை......அருமை...

ராகவன் said...

அன்பு நேசன்,

நல்ல வழக்கமான கவிதை... முதல் பத்தியும், கடைசி பத்தி மட்டுமே போதும் இந்த கவிதைக்கு என்று நினைக்கிறேன்.

விரை தீர்ந்த ஆயுதங்கள் அப்பப்பா... கொல்றீங்க...

இரண்டாம் மற்றும் மூன்றாம் பத்தியை தனியாய் படித்து ரசிக்கலாம். எனக்கு இந்த பெவிகால் இனைப்பு புரியவில்லை...

அன்புடன்
ராகவன்

இரசிகை said...

m.purinthum puriyaamalum......:)

Post a Comment