ஒரு கருக்கலைந்த கவிதை
பாதரசம் கூடுவதைப் போல் உயிர்த்தெழலாம்
கொலைக்குத் தகுதியான நட்பின் துரோகத்தை மன்னிக்கலாம்
உறங்கும் குழந்தையின்
தொட்டில் கடந்து நீண்டிருக்கும் கால்கள் வழி பால்வீதி கடக்கலாம்
கலவியில் தோற்றுக் கிடக்கும் கணவனின்
நெற்றிதடவி குழல் கோதலாம்
ஒரு துறவியின் காத்திருந்த மரணத்தைக் கொண்டாடலாம்
பிசாசின் காமத்துடன் கடவுளுக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்
நுழையும் போது
4 comments:
ஆஹா.
இன்று மதியம், எனக்குச் சிறிது நேரம் கிட்டியது. இத் தளத்துக்கு வந்தேன். 'வெளியேற்றம்' என்று தலைப்பிட்டு, அதன் கீழ் ஒரு கருப்பு வெற்றிடம் இருந்தது. ஆஆ, வெளியேறியதின் பின் ஒரு வெற்றிடம்! காட்சிக் கவிதை! இப்படிப் புரிந்துகொண்டு, கீழிருந்த 'மழை' கவிதைக்குப் போனேன். அங்கேயும் வெற்றிடம்! மழை பெய்து கழுவப்பட்டதொரு வெறுமையைச் சொல்கிறாரோ என்று குழம்பிப்போனேன். சரி, ஏதோ நேர்ந்துகெட்டது, அப்புறமாய் வருவோம் என்று மூடிவிட்டு ஓடிவிட்டேன்.
இப்போது, இக் கவிதைகள் வாசிக்கத் தெளிந்ததில், முன்னைப் பின்புல நிறம்தான் கோளாறு என்று புரிகிறது. நிறம் மாற்றியமைக்கு நன்றி.
'வெளியேற்றம்' தாய்மைத் தகுதியின் ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பெற்று உள்ளதாகப் புரிந்துகொள்கிறேன். வெளியேற்றத்துக்கு எதிர்மறையான நுழைவைத் தேர்ந்து //நுழையும் போது// என்று கவிதை முடிவது இதன் சிறப்பு - என் புரிதலின்படி.
வானம்பாடிகள் சார் மிக்க நன்றி
ராஜசுந்தர்ராஜன் அண்ணா
பின்புல குழப்பம் தான்தோன்றி. செப்பனிட்டாயிற்று
தங்கள் அவதானம் மிகச் சரி . எதிர்மறை விரும்பிச்செய்ததுதான் .நன்றி அண்ணன்
//
தொட்டில் கடந்து நீண்டிருக்கும் கால்கள் வழி
//
IPPADI NETRU YENAKKUL ORU YENNA OTTAM.....:)
Post a Comment