காதுகளில் எலும்பு கூடாத
மழலை ஒன்றின் கபாலத்தை
அணிந்திருந்தாள்
அவள் பாதத்தில் நூற்றாண்டு காலம்
ஒரு கால் பாரம் தாங்கி கிடக்கிறேன்
கருணை கூர்ந்து என்னை தின்னக் கேட்டாள்
பெரு மகிழ்வுடன் ஏந்தினேன்
உப்பு தீர்ந்த இருதயம் முதலில் என்றேன்
நெஞ்சுக்கூடு விலக்கி விரல் செருகியவள்
அறைந்தாள் காணீர்
அவள் பெருந்தனத்தில் பெருகியது உதிரம்
பாதி கல்லான மரத்திலிருந்து மேலெழும் பறவைகள்
அவள் ரோமக் கால்கள்
காதலையுணர் உன் கர்ப்பப்பை
என் புறம் நாரி
3 comments:
நேசா, 'செப்பிடு வித்தை' எனக்கு ரொம்ப வாஞ்சையான ஒரு இடமாக இருக்கிறது. விடுபட்டு போயிருந்த கவிதைகள் அனைத்தும் வாசித்தேன். கற்றுக் கொள்ள நிறைய வைத்திருக்கிறாய்.
மற்றபடி, நேசமித்திரன் கவிதைகள் தளம் வழமை போல் மிரட்டல்! ஓடியே வந்துட்டேன் இங்கு. :-)
அண்ணே ! காற்றாடும் இடத்தில் ஒற்றைக்குயில் குரலுக்கு எதிர் குரல் .மிக்க மகிழ்ச்சி .உங்களுக்கேனும் எழுதிப் பதிகிறேன் :)
அன்பு நேசன்,
இதோ இன்னொரு ஆள்... எனக்கும் பிடிச்சது ரொம்ப... ஆரம்பித்தபொழுது... பிறகு நேசமித்ரத்தனம்... செப்பிடு வித்தையையும் உச்சாணிக்கு நகர்த்தியது... மேலேறி பயணிக்க இன்னும் வாய்க்கவில்லை... மேலேறி பயணிக்கும்போது ஒரு பார்வை பார்க்கத்தான் போறேன்...
அன்புடன்
ராகவன்
Post a Comment