குடிக்கூலி தவணையுள்ள
வீடுகளைப் போலவே
விபத்துகளின் உதிரஞாபகமும்
ஆல்கஹால் இரவில் தையல் கிழிந்த
வயிறாய்
உலோக நகம் திறந்தபடியே
இருந்த ஆறும் காயத்தின் கருப்புள்ள
சாலைகள்
எஸ் .டி.டி பூத்துகளில் முடிந்த
பண்டிகை நாட்கள்
மாத இறுதி கையிருப்பில்
இருக்கும் கிழிந்த நோட்டாய்
காதல்
ரிக்டரள வு மீறிய நாளின்
மீன்தொட்டியாய்
இன்னும் நடுங்கும்
ஜன்னல்வழி பார்த்த கொலையிரவு
பெயர்க்கப்ப ட்ட வீட்டின் ஜன்னல் சட்டத்தில்
சாயமற்று கிடக்கும் யாரோவின்
ஸ்டிக்கர் பொட்டு
இன்னும் மீதமிருக்கும்
நங்கூரங்களின் புன்னகை
(என்றைக்குமான அன்புடன் க.அன்புவேலுக்கு)
வீடுகளைப் போலவே
விபத்துகளின் உதிரஞாபகமும்
ஆல்கஹால் இரவில் தையல் கிழிந்த
வயிறாய்
உலோக நகம் திறந்தபடியே
இருந்த ஆறும் காயத்தின் கருப்புள்ள
சாலைகள்
எஸ்
பண்டிகை நாட்கள்
மாத இறுதி கையிருப்பில்
இருக்கும் கிழிந்த நோட்டாய்
காதல்
ரிக்டரள
மீன்தொட்டியாய்
இன்னும் நடுங்கும்
ஜன்னல்வழி பார்த்த கொலையிரவு
பெயர்க்கப்ப
சாயமற்று கிடக்கும் யாரோவின்
ஸ்டிக்கர் பொட்டு
இன்னும் மீதமிருக்கும்
நங்கூரங்களின் புன்னகை
(என்றைக்குமான அன்புடன் க.அன்புவேலுக்கு)
6 comments:
எங்கள் எல்லோருக்குமான கவிதைதாணன்னா இது.
ஆமாம் நண்பா :)
யாரோவின் ஸ்டிக்கர் பொட்டு...ரசித்தேன் நேசன் !
"எஸ்.டி.டி பூத்துகளில் முடிந்த
பண்டிகை நாட்கள்"
எவ்வளவு உண்மையிது. வெறும் போனில் வாழ்த்து சொல்லியே பண்டிகை கொண்டாடி முடிச்சிடுறோம்.
ஹேமா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சேது
ஆம் நினைவுச்சுனைகளில் நீராடும் கானல் மீன்கள்
HIYAA........
YENAKKU PURINJUDUCHU.
SEMAIYAA IRUKKUNGA SIR!!
Post a Comment