ஓவியத் தாள்களை கணப்பு அடுப்பு
தின்னக் கொடுத்தாயிற்று அதிலிருந்து கசியும்
வர்ண வாசனை மரத்துப் போக புகைத்தபடி
உறை பிரிக்காமல் நடுங்கும் கரத்துடன்
எதிர்வீட்டு இளைஞனுக்கு கொடுத்துவிட்டு
அனுமதியோடு விரல் பதிய அறைந்தேன்
நன்றியும் செத்துப் போக
இராவண வயலின்
காப்பீட்டு பத்திரங்களையும்
கத்தரித்த கூந்தலையும்
நாப்கின்னோடு வீசியாயிற்று
சப்தங்களில் இருந்து தப்பிக்க
எப்போதும் கூடுவதில்லை
நீருள் மூழ்க
அரிந்து வீசிய கருப்பை போலும்
ஏது செய்ய
புணர்ந்த தேகத்தை... ?
புணர்ந்த தேகத்தை... ?
3 comments:
the last lines are attractive.nice poem
நிழல்மொழி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சேது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் அன்பும்
PURIYALE.........YENAKKU.
Post a Comment