மத்தகத்தின் மீது பட்டுத் தெறிக்கும்
மழைத்துளிக்கு பெயர் வெட்கம்
அதீத களிப்பில் ஒரு துளி விஷத்தால்
பரீட்சித்து பார்க்க குறுகுறுக்கிறது
மரணத் தை
வாலுயர்த்தி வானம் சுட்டி
கோளம் கொறித்து
உலகம் விழுங்க முயல்கிறது
அணில்
காகப் பொன் மினுங்க
கிடக்கும் வண்டல்
மீது அமர்கிறது தட்டான்
சிறகு தாழ்த்தி
தம் பருவத்தை
தானுணர்தல் ஆணுக்கு
வாய்ப்பதில்லை
ஒரு சிறுமியைப் போலே
அத்துணை நுட்பமாய்
(தான் பருவமெய்திய நாளை,நாழிகையை நினைவிறுத்தி மெதுவெப்பம் படரச் சொல்கிற மனைவி போல் சொல்லத் தெரியாத கணத்தின் சொல் வளர்த்த கிளை இக்கவிதை(?) )
மழைத்துளிக்கு பெயர் வெட்கம்
அதீத களிப்பில் ஒரு துளி விஷத்தால்
பரீட்சித்து பார்க்க குறுகுறுக்கிறது
மரணத்
வாலுயர்த்தி வானம் சுட்டி
கோளம் கொறித்து
உலகம் விழுங்க முயல்கிறது
அணில்
காகப் பொன் மினுங்க
கிடக்கும் வண்டல்
மீது அமர்கிறது தட்டான்
சிறகு தாழ்த்தி
தம் பருவத்தை
தானுணர்தல் ஆணுக்கு
வாய்ப்பதில்லை
ஒரு சிறுமியைப் போலே
அத்துணை நுட்பமாய்
(தான் பருவமெய்திய நாளை,நாழிகையை நினைவிறுத்தி மெதுவெப்பம் படரச் சொல்கிற மனைவி போல் சொல்லத் தெரியாத கணத்தின் சொல் வளர்த்த கிளை இக்கவிதை(?) )
9 comments:
கவிதை அருமை...
ரெவெரி
சார் ........,கொல்றீங்க .....முடியெல்லாம் சிலிர்க்குது
நன்றி ரெவெரி
நன்றி ரத்னவேல் சார்
பனங்காட்டு நரி நன்றி
தோழர் ராஜசேகர் நன்றி
அண்ணே நீங்க எழுதியதிலேயே இதுதான் வாசிக்க எளிமையா இருக்குன்னு நினைக்கிறேன்.
nallaayirukku..
வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com
இன்று 20.06.2012 வலைச்சரத்தில் தங்களின் இந்தப் படைப்பைப்பற்றி, செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாழ்த்துகள்.
நல்ல கவிதை !
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
இனி தொடர்வேன். நன்றி
நுட்பமாய் உணர்வுகளை உணர்த்தும் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment