நதிக்கரையில் அமர்ந்துகொண்டு
உயிர் தவளைகளை நிறுப்பவன்
பிளந்து தைத்து மம்மிகள் போல்
சுற்றித் தரும் உடலின் கை மடிப்பில்
நேர்த்தி ஓர்பவன்
மைக்ரோ டிப் வந்த பிறகும்
இன்னும் ஷார்ப்னரில் திருகிய
புதுப் பென்சிலின் முதல் சீவல்
மரச் சுருளை பத்திரப் படுத்துகின்றன
குழந்தைகள்
எப்போதேனும் ஊர்வரும் விடுமுறையில்
இப்பவும் குடுகுடுப்பைக்காரரிடம்
கால் மணி நேரம் பேச இருக்கிறது
முன்னாள் காதலிக்கு
கழிவுகளை கட்டிக் கொடுத்தபிறகு
இப்பவும் மறக்காமல் சூடம் கொளுத்துகிறார்
கறிக்கடை சென்றாயப் பிரபு
பாட்டன் மரணத்தை மனைவியிடம்
மறைத்து இன்னமும் ட்ரான்ஸ்பரில் ’ஹோம்’க்கு
பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான் யாரோ
ஒரு பேரன்
கடைசி கண்ணிப்பூவை
ஒரு தூண் சிற்பத்திற்கு சூட்டி
கண்படாத தனித்த கணத்தில்
முத்தமிட்டு விரைபவள்
இன்னமும் கவிதைகள் எழுதுகிறவனையும்
வாசிக்கும் உங்களையும் போல
6 comments:
இன்னும் உவமையா வாழ்க்கைய சொல்லித்தீரலையா நேசன்? செம.
//கடைசி கண்ணிப்பூவை
ஒரு தூண் சிற்பத்திற்கு சூட்டி
கண்படாத தனித்த கணத்தில்
முத்தமிட்டு விரைபவள்// ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
- சித்தார்த்
எழுதுதல் என்பது..
இத்தனை பரிணாமங்களைக் கொண்டதா..!!
அருமை..
எழுத்து பற்றிய எனது எழுத்துக்களைப் படிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_17.html
ம்...எழுத இதுபோல நிறையவே வந்து விரையும் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் !
purinjuduchchu...
அருமையா வந்திருக்கு நேசன்
Post a Comment