Tuesday, January 17, 2012

மண் பிறைக் குருவிகள்

மூடப்பட்ட கிணற்றுச் சுவர்களில்
அலையும் ஒளியென
ஒரு முத்தம் 

மண் பிறைக் குருவிகள் 
இரைக்கு வருவதும் போவதுமாய்

ஆறு வறண்ட ஊரில் 
ஜோடி மாலைகள் மூடி திறந்து 
வீழ்கின்றன

எழுப்பப் பெற்ற வௌவால்
Z   போல பறக்கிறது

1 comment:

ஹேமா said...

ம்...எப்பவும்போலத்தான்.நானும் மண் பிறைக் குருவிபோலத்தன் நேசன்.சுகமா இருக்கீங்களா !

Post a Comment