கழுவேற்றுதலின் சுவாரஸ்யத்தில்
இருந்த உனக்கு கேட்கவே இல்லை
மடலேறும் பறை
உண்ணிகள் களைய எப்பவும் நீட்டும்
கழுத்துதான்
நீதான் ஆபிரகாம் பலி பீடத்தில்
கொன்று செய்த பீலி சாமரம்
வெட்சி வாசம் படர்த்தும்
உன் மாளிகையில்
யட்சனின் குளம்
அரவானின் மனசு
கனாச் சடலங்கள் கரையெங்கும்
கல் அகலிகை
சுமந்து வந்திருக்கிறாள் அண்டைச் சிறுமி
சிற்பம் செய்து தரச் சொல்லி
8 comments:
அறிந்த வார்த்தைகள், ஆனால் பொருள் தேட தமிழ் dictionary பக்கம் ஓடனும். ஓடி விட்டு வருகிறேன்.
நன்றாக இருக்குங்க.
PS:இங்கு போட வேண்டிய பின்னூட்டம், தவறிப் போய் 'வரிக்குதிரையின் கனவில' போய் குத்திபுட்டேன்.
அண்ணே புரிகிற மாதிரி இருக்கு ஆனா புரியலை..
ஓவ்வொரு பந்தியா வாசிச்சா புரியுது நேசன்.எல்லாத்தையும் ஒண்ணாச் சேத்தா புரியல.தலையங்கத்தைப் பாத்தா
இராவணன் கதையோ !
நேசன்,
உங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் பதில் பின்னூட்டம்மிட உதவியா இருக்கும்.
ஒரு கற்பனை கவிஞன் அழகிய அறிய சொற்சித்திரங்களுடன் கவிதை படைக்கிறான். கவிதைகளிலுள்ள சாராம்சத்தைப் புரியாத சிலர் புரியவில்லை என்று சொல்வதால், நீங்கள் பாதிக்கப் படுகறீர்களா?
சேது
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
இது ஒரு காதல் கவிதையாகவும் வாசிக்கப் படக்கூடிய திறப்புகளை கொண்டிருக்கிறது . இராவணன் நினைத்திருந்தால் .. ஆனால் ...
சரவணன் மிக்க நன்றி தலைவரே
நேரில் பேசுவோம் :)
ஹேமா
மிக்க நன்றி ! அப்படியும் கொள்ளலாம்
சேது
இல்லை :)
அவரவர் கைமணல் !
//கவிதைகளிலுள்ள சாராம்சத்தைப் புரியாத சிலர் புரியவில்லை என்று சொல்வதால், நீங்கள் பாதிக்கப் படுகறீர்களா? //
இவன் எங்க பாதிக்கபடுறான் சேது?
பாருங்க கைமணல், மணர் கடிகை, மணல் வீடு என்று பதில் சொல்லவதை? :-))
Ha ha ha. Pa.ra.
//
இவன் எங்க பாதிக்கபடுறான் சேது?
பாருங்க கைமணல், மணர் கடிகை, மணல் வீடு என்று பதில் சொல்லவதை? :-))
//
:))
Post a Comment