புனித நரகத்தை உழுத போது
கிடைத்த வெட்டு பட்ட நாணயம்
பூவிழுந்த உன் கருவிழி
************* ****
நண்பனை புதைத்த நாளில்
அழிந்தது கரு வாசனை
நல்ல தவளையானேன்
********** ************
சுண்டிய உதிரம்
நிரம்பியிருக்கும் ஆஷ்ட்ரேயில்
வெட்டிய நகம் போல்
உதிர்ந்து கிடக்கிறது
நாளை -மறு -நாள் இரவுக்கு
நிரல் செய்த வாடிக்கையாள
எண்ணெழுதிய காகிதம்
************* ********
வீட்டுத் தேனீக்கள்
சேமித்துக் கொண்டே இருக்கின்றன
எச்சிலை விரும்பி உண்ணும்
உதடுகளுக்காக
******************** *
கிடைத்த வெட்டு பட்ட நாணயம்
பூவிழுந்த உன் கருவிழி
*************
நண்பனை புதைத்த நாளில்
அழிந்தது கரு வாசனை
நல்ல தவளையானேன்
**********
சுண்டிய உதிரம்
நிரம்பியிருக்கும் ஆஷ்ட்ரேயில்
வெட்டிய நகம் போல்
உதிர்ந்து கிடக்கிறது
நாளை -மறு -நாள் இரவுக்கு
நிரல் செய்த வாடிக்கையாள
எண்ணெழுதிய காகிதம்
*************
வீட்டுத் தேனீக்கள்
சேமித்துக் கொண்டே இருக்கின்றன
எச்சிலை விரும்பி உண்ணும்
உதடுகளுக்காக
********************
2 comments:
அன்பு நேசன்,
இரண்டாவது கவிதை எனக்குப் புரியவில்லை... ரொம்பவும் பிடித்தது... மூன்றும், நான்கும்... அப்புறம் முதல்...
கிகலோவின் நாட்குறிப்பு... அற்புதம்... நிறைய எழுதலாம் இன்னும்... கிகலோக்கள் நிறைந்திருக்கிறது கென்யா... மண்புழுக்குறி... அறுந்ததும் உயிர்க்கிறது...டில்டோ...
அன்புடன்
ராகவன்
4-vathu purinjathu.........santhosham!remba aasaip padak koodaathillaiyaa.:)
raju iya vaanga.....xplain pana!
mithran sir ku vaazhthukal!
Post a Comment